Truth | உண்மை

புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். The heart of the prudent getteth knowledge; and the ear of the wise seeketh knowledge. 
(நீதிமொழிகள் 18:15)(Pro 18:15)
யேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். Whosoever shall confess that Jesus is the Son of God, God dwelleth in him, and he in God.
(I யோவான் 4:15)(IJohn 4:15)
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். Whosoever believeth that Jesus is the Christ is born of God: and every one that loveth him that begat loveth him also that is begotten of him. 
(I யோவான் 5:1)(I John 5:1)

*இயேசு=கிறிஸ்து(அருள்பொழிவு பெற்றவர்/இரட்சகர்)
 [நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.(யோவான் 6:69) And we believe and are sure that thou art that Christ, the Son of the living God.(John 6:69)]


*இயேசு=மேசியா(இரட்சகர்/கிறிஸ்து)
[அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.(யோவான் 4:25) The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things.(John 4:25)]

*இயேசு=தேவ குமாரன்
[இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (I யோவான் 5:5) Who is he that overcometh the world, but he that believeth that Jesus is the Son of God?(I John 5:5)]

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். 
(நீதிமொழிகள் 14:29) 
He that is slow to wrath is of great understanding: but he that is hasty of spirit exalteth folly. 
(Proverbs 14:29)

சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 
(IIதீமோத்தேயு 4:4) 
And they shall turn away their ears from the truth, and shall be turned unto fables. 
(II Timothy 4:4)

    கோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன
 மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை 
மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று 
அறியக்கடவன்.
(யாக்கோபு 5 :19 ,20)
     Brethren, if anyone among you wanders from the truth, and someone turns him back, Let him know that he who turns a sinner from the error of his way will save a soul from death and cover a multitude of sins.
(JAMES 5:19,20)

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. A sound heart is the life of the flesh: but envy the rottenness of the bones. 
(நீதிமொழிகள் 14:30)(Pro 14:30) 

தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
He that oppresseth the poor reproacheth his Maker: but he that honoureth him hath mercy on the poor.

(நீதிமொழிகள் 14:31)(Proverbs 14:31)
    அன்றியும், சகோதரரே, ஆவிக்குரியவரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. Now concerning spiritual gifts, brethren, I would not have you ignorant. நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. Ye know that ye were Gentiles, carried away unto these dumb idols, even as ye were led. ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். Wherefore I give you to understand, that no man speaking by the Spirit of God calleth Jesus accursed: and that no man can say that Jesus is the Lord, but by the Holy Ghost.
 (I கொரிந்தியர் 12:1-3)(ICorinthians 12:1-3)

வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை. For nothing is secret, that shall not be made manifest; neither any thing hid, that shall not be known and come abroad. 
(லூக்கா 8:17)(Luke 8:17)

வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. For there is nothing covered, that shall not be revealed; neither hid, that shall not be known. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். Therefore whatsoever ye have spoken in darkness shall be heard in the light; and that which ye have spoken in the ear in closets shall be proclaimed upon the housetops. என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.And I say unto you my friends, Be not afraid of them that kill the body, and after that have no more that they can do. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். But I will forewarn you whom ye shall fear: Fear him, which after he hath killed hath power to cast into hell; yea, I say unto you, Fear him. 
 (லூக்கா 12:2-5)(Luke 12:2-5)
குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன். The way of man is froward and strange: but as for the pure, his work is right.
(நீதிமொழிகள் 21:8)(Pro 21:8)

த்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். Whoso causeth the righteous to go astray in an evil way, he shall fall himself into his own pit: but the upright shall have good things in possession.
 (நீதிமொழிகள் 28:10)(Pro 28:10)

திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். And many people shall go and say, Come ye, and let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem. 
(ஏசாயா 2:3)(Isaiah 2:3)

பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்;For there is no man that doeth any thing in secret, and he himself seeketh to be known openly.
(யோவான் 7:4அ)(John 7:4a)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.