2nd coming of JESUS CHRIST | இயேசுவின் இரண்டாம் வருகை


அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம். இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
[ஏசாயா 25:8,9]

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகாநீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர் 
[ஏசாயா 26:4,7]

நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பர்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நட்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்
[தீத்து 2:12-14]
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 
"என் பிதாவின் வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."

நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீகள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி, ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு:

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."

 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
[யோவான் 14:1-7]
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள். அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
வழுவாதபடி உங்களைக்காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். 
[யூதா 21-25]
 


He will swallow up death forever,
And the Lord God will wipe away tears from all faces;
The rebuke of His people
He will take away from all the earth;
For the Lord has spoken.
  And it will be said in that day:
“Behold, this is our God;
We have waited for Him, and He will save us.
This is the Lord;
We have waited for Him;
We will be glad and rejoice in His salvation.”

[Isaiah 25:8,9]
     Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength 
The way of the just is uprightness; O Most Upright, You weigh the path of the just. 
 [Isaiah 26:4,7]

Teaching us that, denying ungodliness and worldly lusts, we should live soberly, righteously, and godly in the present age, Looking for the blessed hope and glorious appearing of our great God and Savior Jesus Christ, Who gave Himself for us, that He might redeem us from every lawless deed and purify for Himself His own special people, zealous for good works
[Titus 2:12-14]
LET not your heart be troubled; you believe in God, believe also in Me.
"In My Father's house are many mansions; if it were not so, I would have told you. I go to prepare a place for you."
"And if I go and prepare a place for you, I will come again and receive you to Myself; that where I am, there you may be also."
"And where I go you know, and the way know." Thomas said to Him, "Lord we do not know where you are going, and how can we know the way?" Jesus said to him,
"I am the way, the truth and the life. No one comes to the Father except through Me."
"If you had known Me, you would have known My Father also; And from now on you know Him and have seen Him."
[John 14:1-7]
Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life. And on some have compassion, making a distinction; but others save with fear, pulling them out of the fire, hating even the garment defiled by the flesh.
Now to Him who is able to keep you from stumbling, and to present you faultless before the presence of His glory with exceeding joy, To God our Savior, who alone is wise, be glory and majesty, dominion and power, both now and forever. Amen.
[Jude 21-25]

ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.  
(வெளி 11:18)
    And the nations were angry, and thy wrath is come, and the time of the dead, that they should be judged, and that thou shouldest give reward unto thy servants the prophets, and to the saints, and them that fear thy name, small and great; and shouldest destroy them which destroy the earth.                    (Rev 11:18)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.