Peace on Earth ^ உலக அமைதியும் சமாதானமும்
- தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- (ஏசாயா 57:19)
- I create the fruit of the lips; Peace, peace to him that is far off, and to him that is near, saith the LORD; and I will heal him.
- (Isaiah 57:19)
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக" ( யோவான் 14 :27 )
"Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid" ( John14:27 )
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
[சங்கீதம்122:6]
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.
[ Psalms 122:6 ]
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள் (திருவெளிப்பாடு 22:5 )
There shall be no night there: they need no lamp nor light of the sun, for the Lord God gives them light. and they shall reign for ever and ever. ( Revelation 22:5 )
எசாயா 11:6-9ன்படி மிருகங்களின் நிலையிலும் மிகப்பெரிய மாற்றங்கள்
நிகழும்.
"அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும். புலி வெள்ளாட்டுக் குட்டியோடே படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்து இருக்கும். ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். " ( எசாயா 11 :6 -9 )
பசுவும் கரடியும் கூடிமேயும். அவைகளின் குட்டிகள் ஒருமித்து படுத்துக்கொள்ளும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங் குழந்தை விரியன் பாம்பு வலையின்மேல் விளையாடும். பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். இப்படிப்பட்ட சமாதானம் இருக்கும்.
"அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான். ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்." ( எசாயா 35 :5,6 )
"அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள். நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்." ( எசாயா 5:20 )
'பர்வதங்கள் திராட்சை இரசமாய் வடிகிறதும்' ( ஆமோஸ் 9 :13 )
தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை புசிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனைகள் இப்படி எதுவும் இருக்காது. அங்கே டாக்டர்களுக்கு வேலை இல்லை.நோய் நொடிகள் இருக்காது. எங்கும் சமாதானம் நிலவும். உலகில் எந்த சிலைகளும் உண்டாகாது. சிலைவணக்கம் எங்கும் இருக்காது. மக்கள் எல்லாரும் கர்த்தரை ஒருமித்து பக்தி விருத்தியோடு தொழுது கொள்வார்கள்.
இதெல்லாம் நம்ப முடியுமா ? என்றால் நாம் நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் பரிசுத்த வேதாகமம் கூறுவதெல்லாம் நிச்சயம் நடைபெற்றுத்தானே ஆக வேண்டும். ஆனால் இப்போது இதைப்பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள கடினமாகத்தான் இருக்கும். 2ம்,3ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனுக்கு அப்போதே இப்போதுள்ள PSLV ராக்கெட்டை பற்றி விளக்கி அதன் செயல்பாடுகளைப் பற்றி கூறினால் அவனால் புரிந்துகொள்ள இயலாது. அந்த 2ம் 3ம் நூற்றாண்டு மனிதன் இந்த 21ம் நூற்றாண்டிற்கு கடந்து வர வேண்டும். வந்தால்தான் PSLV ராக்கெட்டின் செயல்பாடுகள் பற்றி புரிந்துகொள்ளவும் அதனை இயக்கவும் முடியும்.
பழைய ஏற்பாட்டு நோவா காலத்து மரித்த மனிதர்களை எழுப்பி இந்த 21ம் நூற்றாண்டு மனிதர்கள் 80 அல்லது 90 வயதில் மரித்து விடுகிறார்கள் என்று நாம் உண்மையை கூறினால் அவர்கள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரித்து, நாங்கள் நம்ப மாட்டோமே என்பார்கள். ஏனெனில் நோவா காலத்து மனிதர்கள் 700, 800, 900, 950 ஆண்டுகள் வரை சர்வ சாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது மனிதனின் ஆயுட்காலம் அப்படியாக இருந்தது. எனவே அவர்களுக்கு இன்றைய மனிதர்களின் வாழ்க்கையின் ஆயுட்காலம் புதுமையாக தோன்றுகிறது.
[Proverbs 22:6] பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்
[நீதிமொழிகள் 22:6]
"இறையாட்சியைச் சிறுபிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
( மாற்கு 10 :15 )
( மாற்கு 10 :15 )
( Mark 10 :15 )
இன்றைக்கு உயிரோடிருக்கிற நாம் இன்றைய காலக்கட்ட நிகழ்ச்சிகளைத்தான் பார்த்து இருக்கிறோம். புரிந்து கொள்ளவும் முடியும்.இயேசு கிறிஸ்துவின் 1000 வருட சமாதான ஆட்சியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்த காலக்கட்டத்திற்குள் கடந்து போக வேண்டும். கடந்து போகும்போதுதான் அதன் மகிமையை புரிந்துகொள்ள முடியும். ஆகவே நாம் வேத வசனத்தின் மகிமையை உணர்ந்து அது அப்படியே நடக்கும் என்று விசுவாசிப்போம். அந்திக் கிறிஸ்துவி(antichrist)ன் ஆட்சியில் அவனுடைய முத்திரையை பெறாமல் தேவனுடைய வசனத்தினிமித்தம் இரத்த சாட்சியாய் மரித்தவர்கள், கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்ந்து மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்தவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள். இப்படி உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடே 1000 வருடம் இவ்வுலகை ஆட்சி செய்வார்கள். சாத்தான் 1000 வருடங்கள் பாதாளத்தில் அடைக்கப்பட்டிருப்பான். எனவே உலகில் பாவம் இல்லாமல் சண்டை இல்லாமல் மக்கள் சமாதானமாக வாழ்வார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.