என் பக்கம் | My Page

    அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
    He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah.
    ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
    O bless our God, ye people, and make the voice of his praise to be heard:
    அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
    Which holdeth our soul in life, and suffereth not our feet to be moved.
    தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
    For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.
    எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
    Thou broughtest us into the net; thou laidst affliction upon our loins.
    மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
    Thou hast caused men to ride over our heads; we went through fire and through water: but thou broughtest us out into a wealthy place.
      (சங்கீதம் | Psalms 66:7-12)

    தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
    Come and hear, all ye that fear God, and I will declare what he hath done for my soul.
    அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
     
Click Here
Click Here

    I cried unto him with my mouth, and he was extolled with my tongue.
    என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
    If I regard iniquity in my heart, the Lord will not hear me:
    மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
    But verily God hath heard me; he hath attended to the voice of my prayer.
    என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
    Blessed be God, which hath not turned away my prayer, nor his mercy from me.
    (சங்கீதம் | Psalms 66:16-20)
இடம்:மயிலேரிபாளையம்
வருடம்:1990
     நான் குழந்தையான வயதில் தொட்டிலில் படுத்திருக்கும்போது, ஒரு பெரிய பச்சைப்பாம்பு அருகில் கட்டிலில் படுத்திருந்த தாயாரின் அருகில் விழுந்தது என் வாழ்க்கையின் முதல் மறக்கமுடியாத சம்பவம்; அது ஓட்டுவீட்டின் கூரை வழியாக வந்து அந்தரங்கத்தில் படமெடுத்து நெழிந்துகொண்டு நின்றது இப்போதும் நினைவிருக்கிறது; அது என் பாலைக் குடிக்க வந்தோ அல்லது சீண்ட வந்ததோ என்னவோ! அடித்துக் கொன்று புதைத்து கடைசியில் அதற்கு பாலை ஊற்றிவிட்டார்கள்; அவ்வீட்டின் பின்புறம் பெரிய முள்மரத்தின் கிளை அவ்வோட்டு வீட்டின் கூரையோடு ஒன்றித்திருந்ததால் அநேக முறை இதுபோல் மற்ற பாம்பினங்களும் வந்ததாம்;

இடம்:மயிலேரிபாளையம்
வருடம்:1994
     அவ்வீட்டின் பின்புறமாக 2அடி உயர நீர்த்தொட்டி உண்டு; நான் LKG படிக்கும் வயதில் விளையாடிக்கொண்டிருக்கையில், என் தாயார் அதன் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்;  அந்த தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது; மூடியிருக்கும் மரப்பலகையின் மேல் இருந்த குளியல் சோப்பினை எடுக்க முயன்றபோது நீர்த்தொட்டியினுள் தலைகீழாக விழுந்தேன்; மூச்சுத்திணறல் ஏற்பட்டது; கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது; உடனே என் தாயார் விரைந்து தூக்கி மூச்சுக் குழாயின் வழியாக பாய்ந்த நீரை நெஞ்சினிலே அழுத்தி வெளியேற்றி, நாசியிலும் வாயிலும் தன் சுவாசத்தை ஊதித் தேற்றினார்.

இடம்:தூத்துக்குடி_பின்னக்காயல்
வருடம்:2000
     நான் இரட்சிக்கப்படாததற்கு முன்பு, என் பெற்றோருடனும், என் சிற்றன்னையுடனும் ஏழு பிரிவுகள் கொண்ட கடல் ஆற்றின் வழித்தடங்களைக் கடந்து செல்லும் புனித தோமையார் அப்போஸ்தலரின் விக்கிரக ஆராதனைக் கோவிலுக்கு செல்லும் வழியில் அவ்வாற்றின் ஒரு பெரிய பிரிவினைக் கடக்க முயன்றபோது தண்ணீர் மூழ்கும் அளவுக்கு இருந்ததால் நானும் என் சகோதரியும் எங்கள் சிற்றன்னையின் இடுப்பில் ஏறி அமர நினைத்து நான் அமரும்போது தண்ணீரின் ஓட்டமும் இழுப்பு விசையும் அதிகமாக இருந்ததினால், என் கால் சிற்றன்னையின் காலை உந்தித் தள்ளியது; இதனால் தத்தளித்தோம் மூவருமே; உடனே எனது கடைசி சிற்றன்னை நீச்சல் தெரிந்திருந்ததால் எங்கள் அருகில் விரைந்து நீந்தி வந்து கைதூக்கிவிட்டார்.

இடம்:தூத்துக்குடி(Tuticorin)​சாயர்புரம்(Sawyer-Puram)
வருடம்:1999-2001
     அப்போஸ்தலராகிய பவுலும், சகோதரனாகிய திமோத்தேயுவும் கொரிந்தியருக்கும், அகாயா பட்டணத்திலுள்ள பரிசுத்தவான்களுக்கும் எழுதிய நிருபத்திலே ஆசியாவில் தங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க மனதில்லையென்று (2 கொரிந்தியர் 1:1-11ல்) எழுதியுள்ளது போல எனது மற்றும் என் சகோதரனின் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம் என்னவென்றால் தூத்துக்குடி(Tuticorin) மாவட்டம் சாயர்புரத்தில்(Sawyerpuram) உள்ள ஒரு சி.எஸ்.ஐ(C.S.I) கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் அன்னதான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது; வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் அங்கு ஏராளமான ஜனங்கள் வருவார்கள். அவ்விடத்திற்கு நானும் என் சகோதரனும் என்ன நேர்ந்தாலும் இருவருமே கைவிட்டு விடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து கதவண்டையில் அடுத்த பந்திக்குக் காத்திருந்து, கதவைத் திறக்கும் தருவாயில் செய்வதறியாது தடுமாறி கீழே விழுந்தோம்; எங்களுக்குப் பின்னே பசியோடு காத்திருந்த ஜனங்கள் எங்கள் இருவர் மற்றும் சிலரின் மேலேயும், தலையிலேயும் ஏறிமிதித்துப் போய் பந்தி சென்றார்கள்; நாங்கள் இருவரும் எவ்வளவோ எழும்ப முயன்றும் முடியாமல் வேதனைப்பட்டோம் அச்செம்மண்ணில்!!!
     என்னுடைய அழகிய வெள்ளைநிறப் பருத்திச் சட்டை அழுக்குப்படிந்து கருத்தது; இந்நிலையிலும் நானும் எனது சகோதரனும் கைவிடவே இல்லை; மூச்சுத்திணறினோம், துடித்தோம், கண்ணீர்விட்டு வேதனைப்பட்டோம்; எலும்புகளும் நொருங்கிப்போகும் என்றே நினைத்தோம்; ஆனால் அங்கு அதற்குள் வாசலை அடத்தனர் அங்கு நின்றுகொண்டிருந்த காவல் துறையினர்.
     தப்பித்தோம், பிழைத்தோம் என்று பெருமூச்சுவிட்டு வீடுபோய்ச் சேரலாம் என்று நினைத்தோம்; ஆனால் கொண்டுவந்திருந்த பாத்திரக் கூடை காலியாக இருக்கிறதே என்று நண்பனிடமிருந்து உணவைப் பகிர்ந்து கொண்டு கோடைக்கால விடுமுறைக்கு வந்திருந்த எங்கள் பாட்டி வீட்டிற்கு
திரும்பினோம்; 1கொரி 15:19ல் சொல்லப்பட்டதுபோல சம்பவித்தது.

பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.

[சங்கீதம் 74:12]
    For God is my King of old, working salvation in the midst of the earth.

[Psalms 74:12]

    உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
    (சங்கீதம் 119:92)
    Unless thy law had been my delights, I should then have perished in mine affliction.

(Psalms 119:92)






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.