- ஆமென்=அப்படியே ஆகட்டும்
AMEN=The word is used to denote acceptance
- அல்லேலூயா(அல்)ஹல்லேலூயா=தேவனுக்கே மகிமை (அல்) ஆண்டவரைப் போற்றுங்கள்
ALLELUIA (or) HALLELUJAH=PRAISE YE THE LORD
- ஓசன்னா=விடுவித்தருளும்
HOSANNA=SAVE NOW
- ஸ்தோத்திரம்=போற்றி(I PRAISE YOU) (அல்) போற்றப்படுவதாக
ஸ்தோத்திரிக்கிறேன்=போற்றுகிறேன்(I PRAISE YOU)
- MARANATHA=OUR LORD COMETH or COME O LORD
(1 Corinthian's 16:22)
மாரநாதா=கர்த்தர் வருகிறார் (அல்லது) கர்த்தாவே வாரும்
(1 கொரிந்தியர்
16:22)
- ஓம்=அ+உ+ம்
OM=Aa+Uu+Imm
அ=சிருஷ்டிகர்த்தாAa=CREATORஉ=இரட்சகர்Uu=REDEEMERம்=காக்கிறவர்Imm=PROTECTS
- பெத்லகேம்=அப்பத்தின் வீடு
Bethlehem=House of Bread
- மெல்கிசேதேக்கு=நீதியின் ராஜா
MELCHIZEDEK=KING OF RIGHTEOUSNESS
- சாலேம்=சமாதானம்
SALEM=சமாதானம்
- சாலேமின் ராஜா=சமாதானத்தின் ராஜா
KING OF SALEM=KING OF PEACE
- எருசலேம்=அரியேல் (அல்) சமாதான ஸ்தலம் (அல்) நீதிபுரம்
JERUSALEM=ARIEL (or) A LAND OF PEACE (or) THE CITY OF RIGHTEOUSNESS
- விக்கிரகாராதனை=பொருளாசை(க்கு ஆணிவேர்)
(எபே 5:3,5;கொலோ
3:5,6)
IDOLATRY=COVETOUSNESS('s TAP ROOT)
(Ephe 5:3,5;Col 3:5,6)
- பழைய
ஏற்பாடு=நியாயப் பிரமாணத்தை
உள்ளடக்கியது
OLD TESTAMENT=THE DISPENSATION OF "LAW"
- புதிய ஏற்பாடு=கிருபையை உள்ளடக்கியது
NEW TESTAMENT=THE DISPENSATION OF "GRACE"
- பாபிலோன்=ரோம்(உலகம்)
BABYLON=PROBABLY DENOTES ROM and denotes the WORLD
- கோகு, மாகோகு = ரஷ்யா
GOG, MAGOG =RUSSIA
சித்தர்கள் சிலை வணக்கத்தையும், புராண நூல்களையும் கண்டித்து பாடியுள்ளார்கள்.
பத்திரகிரியார் விக்கிரக வணக்கத்தை கண்டித்து பாடியது:
பத்திரகிரியார் விக்கிரக வணக்கத்தை கண்டித்து பாடியது:
"உளியிட்ட கல்லும் உருப்பிடித்து செந்தூரம்
புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம்
வேடிக்கையும், சொகுசும் மெய் பகட்டும்
பொய் பகட்டும் வாடிக்கையெல்லாம் மறந்திருப்ப-தெக்காலம்?"
பாம்பாட்டி சித்தர்-சிலை வணக்கம், ஆறு சாஸ்திரங்கள், புராணங்கள், தந்திர நூல்கள், மார்க்க பேதங்கள், ஜாதி பேதங்களை கண்டனஞ் செய்து பாடியது:
"உளியிட்ட கற்சிலைக்கு உண்டோ உணர்ச்சி,
உலகத்தின் மூடர்கட்குண்டோ உணர்ச்சி,
புளியிட்ட செம்பின் குற்றம் போம், அஞ்ஞானம்
போகாது மூடர்களுக்கென்றாடாய் பாம்பே
சதுர் வேதங்கள், ஆறு வகை சாஸ்திரம்,
பல சூத்திர புராணங்கள் சாற்றும் ஆகமம்
விதவிதமானதான வேறு நூல்களும்
வீணான நூல்களென்றாடாய் பாம்பே
சித்தர் சித்தாந்தம் தேர்ந்தாடு பாம்பே"
செல்போனின் பல்வேறு அம்சங்கள்
தொழிலதிபர்கள் முதல் சாதாரன ஏழைகள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் புழங்குகிறது.
தொலைத்தொடடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், கேமரா, டார்ச், காலண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. செல்போன்....அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்து இருக்கிறார்கள்.
ஆனால் அறிய வேண்டிய அத்தியாவிசய அம்சங்களை அறிந்திருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான்
முதலாவதாக, அவசர நிலைகளில் செல்போன் ஓர் உயிர்க்காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது. அதாவது செல்போன்களுக்கு என்று உலகலாவிய ஒரு அவசரநிலை எண் 112; இக்கட்டான நிலையில், உங்களுக்குச்சேவையை வழங்கும் நிறுவனத்தின் 'நெட்வொர்க்' கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் வெளியிடங்களுக்குத் தொடர்பு கொள்ள முடியாது.
ஆனால் இந்த அவசரநிலை எண்களை அழுத்தும்போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவனத்தின் 'நெட்வொர்க்' இருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும். அதன் மூலம் வெளியே நெருக்கடி கால தகவலை அனுப்பும். 'கீ-பேடு'(Key -Pad ) லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.
செல்போன் தொலைந்தாலோ, திருட்டுப்போனாலோ அதை முறைப்படி தடைசெய்யவும், மீட்கவும் வழிகள் உண்டு.
ஒவ்வொரு செல்போனுக்கும் ஒரு அலை வரிசை எண் உள்ளது. ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற எண்களை அழுத்துங்கள்.
உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண் ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணைக் குறித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் செல்போன் தொலைந்தாலோ, திருடப்பட்டிருந்தாலோ உங்களது செல்போன் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுத்தால் அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை செயலிழக்கச் செய்து விடலாம். 'சிம்கார்டை' மாற்றினாலும் அந்த செல்போனை பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்துவிட முடியும் ...>>(தினத்தந்தி கோவை 8-4-2014)
தொழில் நுட்பத் திகில்
தொழில் நுட்பம் வளர வளர மக்களுடைய தனிமையும், நிம்மதியும் பறிபோய்விடும் என்பது உண்மையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இன்டர்நெட் வந்தபிறகு 'உளவு(Spy)' வேலைகள் சகஜமாகி விட்டன. கூகிள் மேப்(GOOGLE MAP) போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி என எல்லா இடங்களிலும் ரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது.
அதே போலதான் செல்போன். கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். ஒரு நபர் எங்கே இருக்கிறார்? எப்போது அந்த இடத்திற்கு வந்தார்? எங்கேயெல்லாம் போனார்? என சர்வ சங்கதிகளையும் கண்டுபிடித்து விடலாம். குற்றவாளிகளை வலை வைத்துப் பிடிக்க அது மிக வசதியாய் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டியும் நாம் கவனிக்கப்படுவோம். அதற்கான தொழில் நுட்பம் நமது வீட்டின் அறைகளுக்குள் நுழைந்து நம்மை கண்கானிக்கும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சி.ஐ.ஏ(சென்ட்ரல் இன்டலிஜன்ட் ஏஜென்ஸி) இயக்குனர் டேவிட் பீட்ரஸ். குறிப்பாக தொலைக்காட்சி போன்றவையெல்லாம் இன்றைக்கு இணையத் தொடர்போடுதான் வருகின்றன.
இணையப் பக்கங்களில் நுழையலாம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற திரைப்பட பக்கங்களில் போய் படம் பார்க்கலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட வசதிகள்; இதனால் எப்போதும் உலகோடு நமது வீடு
இணைக்கப்பட்டு விடுகிறது.
இப்படி இணையத்தில் உலவும்போது நமது செயல்பாடுகளையெல்லாம் ரகசியமாய்க் கவனிக்க முடியும் என கூறி அவர் திடுக்கிட வைக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம்; நமது விருப்பம் என்ன? நமது செயல்பாடுகள் என்ன போன்ற அனைத்து விஷயங்களும் ரகசியமாய் உறிஞ்சப்படலாம் என்கிறார் அவர். இணையத்தின் மூலமாக மட்டுமல்லாமல், ரேடியோ ஒலி அலைகள் மூலமாகக்கூட நபர்களைக் கண்காணிக்க முடியுமாம்.
ஒரு வகையில் நமக்குத் தெரியாமலேயே நமது விருப்பங்கள், செயல்பாடுகள் என ஏகப்பட்ட விஷயங்களை நாம் யாரோ ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த சிந்தனையே ஒரு வகை அசவுகரியத்தைத் தருகிறது இல்லையா? இப்போது எல்லா மொபைல்களும் வேறு இணையத்தோடே இணைந்திருப்பதால் இந்த 'உளவு' பல மடங்கு உயரும் என்பது அவருடைய கருத்து.
தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களில் கூட 'கம்ப்யூட்டர் சிப்' இணைத்து கவனிக்கலாம் என்று அவர் தெரிவிக்கும் கருத்து இன்னும் அதிர வைக்கிறது|தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது.
>>....மார்ச்-26ல் "மவுஸ் பையன்" தொகுப்பு அடங்கிய ஒரு நாளிதழில் வெளியானது
---------------------------------------------------------
மருத்துவக் குறிப்பு
- இருதயம் பலவீனமானவர்கள் உணவில் அவ்வப்போது கொத்தமல்லிக் கீரையை சேர்த்தால் குணம் பெறலாம்
- சீரகத்தையும், உப்பையும் பொடி செய்து சாப்பிட நெஞ்சுவலி நீங்கும்
- உள்ளிப்பூண்டை பாலில் வேக வைத்து இரவில் சாப்பிட்டு வர ரத்தகொதிப்பு குணமாகும்
- செம்பருத்திப்பூசெம்பருத்திப்பூவில் ஏகப்பட்ட இனம் உண்டு; எனினும் மஞ்சளும் சிவப்பும் கலந்த நாட்டு செம்பருத்தி பூவே எல்லா வகையிலும் சிறந்தது.காலை எழுந்ததும் 5முதல் 10 பூக்களின் இதழ்கள் மட்டும் மென்றுதின்று சிறிதளவு நீர் அருந்தவும்; இவ்வாறு செய்து வந்தால் இரத்தம் சுத்தமாகும், வயிற்றுப்புண் ஆறும், இருதயம் பலப்படும், உடல்வெப்பம் தணியும்.
- வெண்டைக்காயின் சதைப்பற்றுள்ள பகுதியை உணவாக உட்கொண்டால் அது ஆரம்ப நிலையில் உள்ள நோய்களின் தாக்கத்தை அதிகரித்துப் பெருகச் செய்வதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.
------------
அப்படியா?
- மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, பல வணிகர்கள் மறைமுக ஆதரவு தெரிவித்தனர்; இதன்படி சத்தியாகிரகத்துக்கு பாதயாத்திரை செல்பவர்கள், சம்பந்தப்பட்ட உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு, 'காந்தி கணக்கு' எனச் சொல்வார்கள். கடைக்காரர்களும் இவர்கள் தேசபக்தர்கள் எனப் புரிந்துகொண்டு பணம் வாங்கமாட்டார்கள்.
- இஸ்ரேல் நாட்டில் தீயில் எரியாத 'டமாரிஸ் ரெப்' எனப்படும் ஒருவகை மரம் உள்ளது. இதில் அடங்கியுள்ள உலோகப் பொருள் சேர்க்கை அதை எரியாமல் செய்கிறது. இந்த மரம் இரவில் சொட்டுச் சொட்டாக உப்பு நீரை வெளிப்படுத்தும்
- பூனை ஒரு நிறக்குருடு பிராணி; எல்லா பொருட்களும் பூனைக்கு வெள்ளை நிறத்தில்தான் தெரியும்
- தென்துருவத்தில் வீசும் காற்று, கடிகாரம் சுற்றும் திசையிலும், வடதுருவத்தில் வீசும் காற்று, கடிகாரம் சுற்றுவதற்கு எதிர்த்திசையிலும் சுழன்று வீசுகின்றன.
- பழைய டில்லி எவ்வாறு அழைக்கப்பட்டது? Answer >>ஷாஜகானாபாத்
- மைல் அளவை 8 என்ற எண்ணால் பெருக்கி 5 என்ற எண்ணால் வகுத்தால் வருவது கிலோ மீட்டர் ஆகும்
- ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்
- பைன் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் டர்பன்டைன்
எறும்புகள் புத்திசாலிகள்
எறும்புகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள். எறும்பு புற்றில் முட்டைகள், குஞ்சுகள், தலைவி, ஆண் எறும்புகள் ஆகியவற்றுக்கும், தானிய சேமிப்பிடங்களுக்கும் தனித்தனி அறைகள் இருக்கும்.
வெடிக்கும் மரம்
தமிழகத்தில் நீலகிரி பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் மிகுதியாக உள்ளன. யூகலிப்டஸ் மரத்திற்கு உள்ள வினோத குணம் பற்றி நீங்கள் அறிவீர்களா?
காட்டுத்தீ பற்றிக் கொண்டால் யூகலிப்டஸ் மரம் 'அணுகுண்டு' பட்டாசு போல பயங்கர சப்தத்துடன் வெடி ஒலியை எழுப்பிக் கொண்டு எரியும். எனெனில் இதன் பூக்கள், காய்களில் உள்ள எண்ணெய்க்கு வெடிக்கும் தன்மை உண்டு.குயிலின் தந்திரம்
குயிலின் ஓசை இனிமையானது; ஆனால் அது பொல்லாத தந்திரம் கொண்ட பறவை. குயில்கள் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதற்குள்ள மற்றொரு குறுக்குப்புத்தி பற்றியும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
குயில்கள் மற்ற கூட்டில் தனது முட்டையை வைக்கும் முன்பாக அந்தக் கூட்டிலுள்ள ஒரு முட்டையை எடுத்துவிட்டுத்தான் வைக்கும். பறவைகள் தனது முட்டையை இனம்காணாமல் இருக்கவே குயில்கள் இப்படி தந்திரம் செய்கின்றன.
மேலும் மற்ற முட்டைகளுக்கு முன்பாகவே குயில் முட்டை குஞ்சு பொறித்து வெளியே வந்துவிடும். பிறந்த 10மணி நேரத்தில் குயில் குஞ்சு நல்ல வலிமையைப் பெற்றுவிடுகின். பல சமயங்களில் கூட்டில் தன்னை உரசும் மற்ற முட்டைகளையும், இளம் குஞ்சுகளையும்கூட வெளியே தள்ளிவிட்டு தனி ராஜாங்கம் நடத்துகின்றன குயில் குஞ்சுகள்....>>...>>தினத்தந்தி சிறுவர் தங்கமலர் 28-2-2014
'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான்' என்ற பழமொழியை நினைவுபடுத்தும் விதமாக, குயில்கள் செய்யும் அட்டகாசத்தை பார்த்தீர்களா குட்டீஸ்
பரமசாது ஒட்டகம்
ஒட்டகம் மிகவும் சாதுவானது; வழியில் இறந்து கிடக்கும் மற்றோர் ஒட்டகத்தைப் பார்த்தாலே அதிர்ச்சியில் தானும் உயிரை விட்டுவிடும்.
உடலுடன் எழுத்துமே பிறந்தது!
பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேமில் உள்ள ஐடா அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன் கன்னத்தில் அரபி எழுத்தில் 'ஆலா' என்ற பெயரை குறிக்கும் வகையில் குறிகள் இருந்தன.இடி இடிக்கும் போது...
இடி, மழை பெய்யும்போது பொட்டல் வெளியில் தனித்து நிற்கக் கூடாது. மின்னலை நம்மை நோக்கி இழுக்கும் சக்தி நமது உடலுக்கு உண்டு. கையில் குடையோடு நிற்பது மேலும் ஆபத்தானது; வாகனங்கள், உயரமான இடங்கள் மீது ஏறி நிற்பதையும் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக மரத்தடியில் ஒதுங்கக் கூடாது. நாலைந்து பேராக இருந்தால் ஒருவருக்கு ஒருவர் போதிய இடைவெளி விட்டு நிற்பது நல்லது. உலோகப் பொருட்களுக்கு அருகில் நிற்காதீர்கள்.
நத்தைகள்:
வளர்பருவத்தில் உடலமப்பில் ஏற்படும் மாறுதல்கள் வியக்கத்தக்கவையாக இருக்கும்; லார்வா பருவத்தில் பின்புறமிருக்கும் பறமடி மென்தொலி அறை முதிர்பருவத்தில் முன்புறம் வந்துவிடுகிறது. இதனால் உடலினுள்ளிருக்கும் உறுப்புகள் எல்லாம் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக மாறி அமைந்துவிடுகிறது. இம்மாதிரி திருக்கத்தினால் தலைப்பக்கம் கால் அமைந்துவிடுகிறது. மேலும் நரம்புமண்டலமும் திருகினாற்போல் ஆகிவிடுகிறது. வளர் பருவத்தின் இருதிக்கட்டத்தில் உணவுப் பாதையும் சுருண்டுவிட கூடுகள் திருகுசுருள் வடிவம் பெறுகிறது.
மூரக்ஸ் நத்தை கடல்வாழ் நத்தையினங்களில் பெரிய குடும்பம்; இக்குடும்பத்தில் ஏராளமான இனங்கள் உள்ளன நீண்ட முள் போன்ற அமைப்பும் இழைக்குஞ்சம் போன்று இதன் ஓட்டில் இருக்கும். இதன் உணவு இரட்டை ஓட்டினத்தைச் சேர்ந்த மெல்லுடலிகள்; கூட்டங்கூட்டமாக வாழ்பவை. முன்பு போனீஷியர்களும், கிரேக்கர்களும், ரோமர்களும் இவைகளிலிருந்து கருஞ்சிவப்பு, ஊதா சாயங்களைத் தயாரித்தனர். இவைகள் சுரக்கும் மஞ்சள் நிற திரவத்தைக் கொதிக்க வைத்து இச்சாயங்களைத் தயாரித்தனர்; இந்தச் சாயமேற்றப் பெற்ற கம்பளி, பருத்தி ஆடைகளுக்கு விலை மிக மிக அதிகம்; பெருஞ்செல்வர்களும் மன்னர்களுமே வாங்கி அணிய அனுமதிக்கப்பட்டனர். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கத்தோலிக்கத் துணைவர்கள் அணியும் அதிகாரப்பூர்வமான வண்ணமாக இதன் சாயம் விளங்கியது. சாயம் எடுப்பதற்கென்றே இந்த நத்தைகளைப் பெருவாரியாக வளர்த்தனர் அன்று.
பாறைச் சிப்பியினமும் பல வடிவ ஓடுகளை உடையவை. உணவிற்காகப் பெருமளவு பிடிக்கப்படுகிறது. இதிலிருந்தும் முன்பு ஊதாச்சாயம் தயாரித்தனர். மட்டி, ஆளிகள் முதலியவையே இவைகளின் முக்கிய உணவு.
....>>நன்றி:கோயம்புத்தூர்(மணிக்கூண்டு)_நூலகம்_உயிரியல்பிரிவு
மின் விசிறியின் வேகம் அதிகமானால் மின்சாரம் வீணாகுமா?
நமது வீடுகளில் மின்விசிறிகளை பயன்படுத்துகிறோம். அதன் வேகத்தை குறைத்து வைத்தால் மின்சாரம் குறைவாக செலவழியும் என்று நீங்கள் எண்ணலாம்; அது நிஜமல்ல; வேகம் குறைவாக இருந்தால்தான் அதிக மின்சாரம் செலவழிக்கப்படுகிறது என்பதே உண்மை. அது ஏனென்று தெரியுமா?
மின்விசிறியின் வேகத்தை மாற்றறுவதற்கு திருகு சுவிட்சுகளை பயன்படுத்துகிறோம். இதன் உதவியுடன் நாம் விசிறிகளை இயக்கும்போது, விசிறிக்குத் தேவையான மின்தடையைத்தான் கூட்டி, குறைக்கிறோம். மின்தடையை கூட்டினால் மின்விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின்விசிறியின் வேகம் கூடும். இதனால் வேகமாகச் சுற்றும்போதுதான் குறைந்த மின்சாரம் விரயமாகும். மெதுவாக சுற்றினால் அதிகமான மின்சாரம் வீணாகிறது.
வேகத்தை குறைத்தாலும், கூட்டினாலும் மின்சாரத்தை அதிகமாக விரயமாக்காத நவீன மின்விசிறிகளும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
....>> (தினத்தந்தி சிறுவர் தங்கமலர் 31-1-2014)

தெரியுமா?
- தென்துருவத்தில் வீசும் காற்று, கடிகாரம் சுற்றும் திசையிலும், வடதுருவத்தில் வீசும் காற்று, கடிகாரம் சுற்றுவதற்கு எதிர்த்திசையிலும் சுழன்று வீசுகின்றன.
- பழைய டில்லி எவ்வாறு அழைக்கப்பட்டது_Ans:ஷாஜகானாபாத்
- பீகார்'ன் மற்றொரு பெயர்=மகதம்.
- கொலம்பியாலிவியா எனப்படுவது=புறா.
புகைப்பிடிக்கும்
பழக்கத்தை கைவிட முடியாமல் சிலர் அவதியுறுகிறார்கள். இதற்கு மிகவும் எளிய
வழி ஒன்று இருக்கிறது. அதாவது உலர்ந்த திராட்சை பழத்துக்கு இந்த மகத்துவம்
இருக்கிறது. புகைபிடிக்க தோன்றும்போது 2 உலர்ந்த திராட்சையை வாயில் போட்டு
சுவைத்தால் அதன் இனிப்பு கரைசல் புகைபிடிக்க தூண்டும் உணர்வை
கட்டுப்படுத்தும்; அதுமட்டுமல்ல புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்கிற
நஞ்சையும் கரைக்கும் ஆற்றல் இருப்பதாக இயற்கை மருத்துவ ஆராய்ச்சி ஒன்று
கூறுகிறது.
இவ்வாறு உலர்ந்த திராட்சையை பயன்படுத்தும் யுக்தி சீன மக்களிடம்
பிரபலம்; ஆகவே ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்கி வைப்பதற்கு பதிலாக உலர்ந்த
திராட்சை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நலமாக
இருக்கும்
....>>(குறிப்பு:தினத்தந்தி_நெல்லை_05/03/2014)
"கொடிய நச்சு(Toxin)களையும் தூய்மைப்படுத்தும் நத்தைகள்".... நத்தையின் பெயர்?.... விவரங்களை அறிய கோவை தினத்தந்தியின் சிறுவர் தங்க மலர் 01அல்லது 08/நவம்பர்/2013 இணைப்பை படித்துப் பயன்பெறவும்.
இயேசுகிறிஸ்துவைப்பற்றி வேதம் கூறுவதென்ன?
"கொடிய நச்சு(Toxin)களையும் தூய்மைப்படுத்தும் நத்தைகள்".... நத்தையின் பெயர்?.... விவரங்களை அறிய கோவை தினத்தந்தியின் சிறுவர் தங்க மலர் 01அல்லது 08/நவம்பர்/2013 இணைப்பை படித்துப் பயன்பெறவும்.
****யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses)****
உலகமெங்கும் பரவி வரும் இந்த கொள்கையைப்பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது. இந்த இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்.
1.சார்லஸ் டாஸ் ரசல்(Charles Taze Russell 1852-1916)
இவர் இந்த இயக்கத்தை நிறுவியவர். இவர் 1852 பிப்ரவரி 16ல் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய தகப்பன் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் காங்ரிகேஷனல் சபையைச் சேர்ந்தவர்; சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் சிலவற்றைக் குறித்து ரசலுக்கு சந்தேகங்கள் வந்தது. இதனால் மற்ற மார்க்க கொள்கைகளை கற்க ஆரம்பித்தார். பின்பு வேதத்தை கற்க ஆரம்பித்தார். குறிப்பாக தனியேல், வெளிப்படுத்தல் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். வில்லியம் மில்லர் என்பவரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.
தனது 18ம் வயதில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிட்ஸ்பர்க் என்ற ஊரில் ஒரு வேதபாட வகுப்பை ஆரம்பித்தார். பின்பு அந்த குழுவினருக்கு மேய்ப்பரானார். கி.பி.1879ல் 'வாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொசைட்டி' என்ற நிறுவனம் ஆரம்பமானது. ரசல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்து தன் கொள்கைகளைப் பரப்பினார். அநேக புத்தகங்களை எழுதினார். 60 ஆண்டுகளில் சுமார் 2கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இவர் சபையிலுள்ள பெண்களுடன் தவறான உறவு கொண்டிருக்கிறார் என்று இவரது மனைவி 1909ல் நீதிமன்றத்தில் 5 முறை வழக்கு தொடர்ந்தார் கடைசியில் விவாகரத்துப் பெற்றார். 1916ல் ரசல் மரித்தார்.
2.ஜோசப் ஃபிராங்ளின் ரூத்தர் போர்ட்(Joseph Franklin Rutherford 1869-1942)
ரசலுக்குப்பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர்; பின்பு நீதிபதியானார். 1906ல் இவர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். 1931ல் இந்த இயக்கத்தின் பெயர் 'யெகோவா சாட்சிகள்' என்று மாற்றப்பட்டது. இவர்களுடைய தலைமை ஸ்தாபனம் நியூயார்க்கில் இருக்கிறது; இந்த இயக்கத்தின் புத்தகங்கள் கோடிக்கணக்கில் வெளியிடப்படுகின்றன
ருத்தர்போர்டின் புத்தகங்க சுமார் 80 மொழிகளுக்குமேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சுமார் 8000 மிஷனரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளார்கள் என்பது பழைய கணக்கு. 1942ல் ருத்தர் போர்டு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான்டியாகோ பட்டணத்தில் மரித்தார்.
3.நேத்தன் நோர்(Nathan Knorr)
1905ல் பிறந்தார். ருத்தர்போர்டுக்குப்பின் இதன் தலைவரானார். வீடுவீடாக சென்று சாட்சிபகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர்தான். இவருடைய நாட்களில்தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
யார் இந்த யெகோவா சாட்சிகள்?
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை நம்புகிறவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
யெகோவா சாட்சிகளின் முக்கிய கொள்கைகள்
1.யெகோவாவே தேவன். இயேசுகிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர்.
இப்படிச் சொல்வதின்மூலம் இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் இதற்காக தவறாக பயன்படுத்தும் வேத வசனங்கள் ஆறு:
1).....என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.(யோவான் 14:28)
2).....நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.(லூக்கா 18:19)
3)ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.(1 கொரி.11:3)
4)சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.(1கொரி.15:28)
5).....உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;(வெளி.3:14)
6)அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.(கொலோ.1:15)
இந்த வசனங்களின்படி இயேசுகிறிஸ்து தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர், தேவனுக்கு கீழானவர் என்று நம்புகின்றனர். இது தவறான போதனை என்பது நம் கொள்கை. இதற்கு நாம் பதிலளிப்போம்:
இயேசுகிறிஸ்துவைப்பற்றி வேதம் கூறுவதென்ன?
¤ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.(ஏசாயா 7:14),(மத்தேயு 1:23)
¤நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.(ஏசாயா 9:6)
¤ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.(யோவான் 1:1,2,) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.(யோவான் 1:14)
¤இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.(யோவான் 5:17),......தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே,........(யோவான் 5:18)
¤அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.(யோவான் 14:9-11)
¤அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.(கொலோ.1:15)
¤ ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.(கொலோ.2:9)
¤அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.(1 தீமோ.3:16)
¤குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.(எபி.1:8)
¤அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.(1 யோவான் 5:20)
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது; கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் கூரியோஸ்(Kurios) என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது; பழைய ஏற்பாடு எபிரெய மொழியில் எழுதப்பட்டது. எபிரெய(Hebrew) மொழியில் வரும் "யெகோவா" என்பதும், கிரேக்க மொழியில் வரும் கூரியோஸ் என்பதும் ஒரே கருத்தில்தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே இயேசுகிறிஸ்துவே யெகோவா.
*இயேசுகிறிஸ்து தெய்வீகமானவர்
இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்:
¤ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.(யோ.5:26);அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது இதன் பொருள்
¤அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.(யோ.14:6)
¤அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.(யோ.1:4)
¤ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.(யோ.10:18)
தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர், சிருஷ்டிக்கிறவர். இத்தனை தெய்வீகத் தன்மைகளையும் இயேசுகிறிஸ்துவிடம் காண்கிறோம்.
*இயேசுகிறிஸ்து சர்வ வல்லவர்:
¤அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(மத்.28:18)
¤"இயேசுகிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர். மரணத்தின்மேலும், பாதாளத்தின்மேலும் அதிகாரமுடையவர்" (வெளி1:18)
*இயேசுகிறிஸ்து சகலத்தையும் அறிந்தவர்
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.(யோவா.1:48)
¤மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.(யோ.2:25)
*இயேசுகிறிஸ்து எங்கும், எப்போதும் இருக்கக்கூடியவர்
¤ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.(மத். 18:20)
¤நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.(மத்.28:20)
*இயேசுகிறிஸ்து மாறாதவர்
¤இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்(எபி.13:8)
*இயேசுகிறிஸ்து பாவத்தை மன்னிக்கிறார்:
¤மாற்கு 2:5-12
*இயேசுகிறிஸ்து சிருஷ்டிகர்த்தர்:
¤சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.(யோ.1:3,10)
¤ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது(கொலோ.1:16)
¤தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,(எபே.3:9)
¤இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;(எபி.1:2,10)
*இயேசுகிறிஸ்துவை தொழுது கொண்டனர்:
¤அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.(மத்.8:2)
¤அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.(மத்.9:18)
¤அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.(மத்.14:33)
¤அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.(மத்.15:25)
¤அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.(மத்.20:20)
¤அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.(மத்.28:9,17)
மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசுகிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலும்
2.இயேசு சரீரத்தில் மரித்தார் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்|இயேசுகிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலை இவர்கள் மறுதலிக்கிறார்கள்.
வேத வசனங்களை ஆராய்வோம்:
¤இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.(லூக்.24:36-44)
சிறு பிள்ளையும் விளங்கக்கூடிய அளவில் இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளது, யெகோவா சாட்சிகளுக்கு ஏன் விளங்காமல் போனது. நமது ஊருக்கு வந்த தோமா, அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு அந்த காயத்திலே என் விரலைவிட்டு என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோன்றி தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு (இன்றுள்ள நிலைமைப்படி சொன்னால்.... தோமாவே, யெகோவா சாட்சியாக மாறிவிடாதே) என்றார். தோமா அவருக்கு பிரதியுத்தரமாக, என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்(யோ.20:24-31). வெளி.1:13-18ல் யோவான் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் கண்டதை விளக்கமாக எழுதியுள்ளார்.
இயேசுகிறிஸ்து நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்(அப்.1:3)
*3.யெகோவா சாட்சிகள் திரித்துவத்தை நம்புவதில்லை
யெகோவாவே தேவன், இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர், பரிசுத்த ஆவி ஆளத்துவமுடையவரல்ல, காண இயலாத ஒரு சக்தி அவ்வளவுதான் என்று போதிக்கின்றனர்; இந்த கொள்கையும் தவறானதாகும். திரித்துவத்தை விளக்குவது, கடினமான காரியம் என நமக்கு நன்கு தெரியும்; வேதாகம கல்லூரியில் 21 ஆண்டுகள் போதித்தேன். திரித்துவத்தைப் பற்றி தெளிவாக யாரும் விளக்கிவிட முடியாது என்பது உண்மை. நம்மால் விளக்க முடியாததால் வேத சத்தியம் தவறானதல்ல.
'தேவன்' என்பதற்கு எபிரெய வார்த்தை 'எலோகிம்'. இதை அப்படியே மொழி பெயர்த்தால் தேவர்கள் என்று வரும். ஆனால் வினைச்சொல் ஒருமையிலேயே வருகிறது. உதாரணமாக(ஆதி.1:1) ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று கூறலாம்; சிருஷ்டித்தார் என்பது ஒருமையில்தான் வருகிறது. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளத்துவமுடையவர் என்ற கூற்று புலனாகிறது.
ஒரே நபரில் எப்படி மூன்று ஆளத்துவம் இருக்கமுடியும் என்பதற்கு என் பதில்... ஒரு நபருக்குள்ளே லேகியோன், அதாவது 6,000 ஆவிகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே, இதை விளங்கிக்கொள்ளவா முடிகிறது?
*4.கி.பி.1914ல் இயேசுகிறிஸ்து வந்துவிட்டார்; நாம் இப்போது ஆயிர வருட ஆட்சியில் இருக்கிறோம். யெகோவா தன் ராஜ்யத்தை உலகத்தில் நிறுவிவிட்டார் என்பது இவர்கள் கொள்கை.
இதைப்போல ஒரு ஜோக் யாரும் அடித்திருக்க முடியாது; என்ன அருமையான ஆயிர வருட ஆட்சி! சினிமா தியேட்டர்கள் பெருகுவதும், கொலையும் கொள்ளையும் பெருகுவதும், சினிமா நடிகர், நடிகைகளெல்லாம் ஆட்சி செய்வதும் என்ன பிரமாதமாக இருக்கிறது! வேதம் கூறும் ஆயிர வருட ஆட்சி இப்படியா இருக்கும்?
4.1.ஆயிர வருட ஆட்சியில் பிசாசு பாதாளத்தில் கட்டி வைக்கப்படுவான் என்று கூறப்பட்டுள்ளது.(வெளி.20:1,2).
இப்போது அதிக வேகத்தோடு அல்லவா வேலை செய்துகொண்டு இருக்கிறான்; கட்டப்படவில்லையே
4.2.இயேசு எருசலேமை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்வார்.(வெளி.20:4;எரே.23:5,6.)
பூமியெங்கும் அவர் ஒருவர்தான் ராஜாவாயிருப்பார்(சகரியா 14:9; சங்.72:6-11). இன்று யேசபேல், ஆகாப் போன்றவர்களல்லவா ஆட்சி செய்கிறார்கள்!
4.3.மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்து இயேசுவுடன் ஆட்சி செய்வார்கள்(வெளி.20:4,6; 2 தீமோ 2:11)
4.4.இஸ்ரவேலர் எல்லோரும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்(சகரியா 12:10-13; ஏசாயா 66:8).
4.5.இயற்கையில் மாற்றமுண்டாகும், வளப்பமுண்டாகும்(சகரியா 14:4-10; ஏசா.35:1-5)
4.6.மிருகங்கள் தீமை செய்யாது, ஒற்றுமையாக இருக்கும்.
ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்(ஏசா.11:6) (இப்போது ஒரு குடும்பத்திலேயே எல்லோரும் சேர்ந்து படுக்க பயப்படுகிறார்களே)
"பசுவும் கரடியம் கூடிமேயும்"ஏசா.11:7. (ஒரு சபை விசுவாசியும், அடுத்த சபை விசுவாசியும் ஐக்கிமாயிருப்பதே இப்போது பெரிய சாதனையாக இருக்கிறதே). "பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்"ஏசா.11:8(இந்த வேலையை யாரும் இப்போது செய்துவிட வேண்டாம்). சிங்கம் மாட்டைப்போல வைக்கோல் தின்னும்"ஏசா.11.7.(இப்போதுள்ள பஞ்சத்தில் இது வேண்டுமானால் நடக்கலாம்) ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது மிருகங்களுடைய சுபாவமே மாற்றப்படும். தீமை செய்கிறவர்களே இருக்கமாட்டார்கள்(ஏசாயா 11:9).
ஆயுசு நாட்கள் நீடித்திருக்கும். 100வயதுள்ளவனும் வாலிபன் என்று எண்ணப்படுவான்(ஏசா.65:20). சாத்தான் பாதாளத்தில் கட்டப்பட்டிருப்பதால் தீமை இருக்காது. இயேசுகிறிஸ்து ஆட்சி செய்வதால் உலகமெங்கும் ஆசீர்வாதமும், செழிப்பும் இருக்கும். இதில் ஒன்றும் இப்போது நடக்கவில்லை. எனவே இயேசு இன்னும் வரவில்லை, ஆயிரம் வருட ஆட்சி ஆரம்பிக்கவில்லையென்று குருடனுக்குக் கூட தெளிவாகத் தெரியும்.
*5.இயேசுகிறிஸ்துவின் தியாகபலி மட்டும் நம்மை இரட்சிக்கப் போதுமானதல்ல
ஆதாமின் பாவத்திற்கு பரிகாரம் இயேசுகிறிஸ்துவின் மரணத்தால் உண்டாகியிருக்கிறது. மனித இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவின் பலி போதுமானதல்ல; ஒருவன் யெகோவாவிற்கு உண்மையாயிருந்து, வசன போதனை, பிரசங்கங்களைக் கேட்டால்தான் இரட்சிக்கப்படுவான் என்று நம்புகின்றனர்.
வேதம் இதற்கு பதில் கூறுவது:
¤கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறோம்(எபே.2:8,9)
¤கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் புது சிருஷ்டியாகிறான்(2 கொரி 5:17)
¤இயேசுவை விசுவாசித்தால் இரட்சிப்பு கிடைக்கிறது(அப்.16:31)
¤குமாரனை உடையவன் நித்திய ஜீவனை உடையவன்(1யோ.5:12)
¤இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்(1யோ.1:7).
*6.ஆத்துமா நித்தியமானதல்ல, ஆக்கினைத் தீர்ப்பும் நித்தியமல்ல.
வேதம் கூறுவது என்ன?
*மத்.25:41,46:
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
நித்திய அக்கினி, நித்திய ஆக்கினை பாவிகளின் பங்கு.
*வெளி.20:15:
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
*மத்.10:28:....ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
இவ்வசனத்தை இவர்கள் ஆதாரமாகக்கொண்டு பாவிகளின் ஆத்துமா அழிக்கப்படும்; நித்திய ஆக்கினை அடைய மாட்டார்கள் என நம்புகின்றனர்; அப்படியானால் வெளி.20:12ல் மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன் என்று யோவான் சொல்வது எப்படி? அழிக்கப்பட்டுவிட்டால் எப்படி இங்கே நிற்பார்கள்?
*7.வெளி.14:1-5ல் கூறப்பட்டுள்ள 1,44,000 நாங்கள்தான் என்கிறார்கள்
சண்டை இங்கே தான் ஆரம்பமாகிறது. ஏழாம்நாள் ஒய்வுக்காரரும் நாங்கள் தான் இந்தக் கூட்டம் என்கிறார்கள். நமது அருமை நண்பர்கள் இலங்கை பெந்தெகொஸ்தேகாரரும் நாங்கள்தான் இவர்கள் என்கிறார்கள்; இவர்களில் யார் வெற்றியடைந்து எந்தக் கூட்டத்தாரானாலும் சரி, அல்லது ஒரு சமரசத்திற்கு வந்து மூவரும் சமமாக பங்கிட்டுக் கொண்டாலும் நமது வாழ்த்துக்கள் அவர்களுக்கு உண்டு.
யூதர்களில் கோத்திரத்தாருக்கு 12000 வீதம் 12 கோத்திரத்தாரும் உபத்திரவ காலத்தில்(வெளி.7) முத்திரை போடப்பட்டு(வெளி.14) பரலோகத்தில் காணப்படுகிறார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.
*8.மற்ற எல்லாருக்கும் மறுபடியும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படும்; மற்ற எல்லாருக்கும் ஒரு பரீட்சை(Test) கொடுக்கப்படும்; அதில் யெகோவாவிற்கு கீழ்படிகிறவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்பது இவர்களின் கொள்கை.
நம் சபையார்களுக்கு இது ஆறுதலாகத் தெரியலாம்; அப்லபடியானால் இங்கே எப்படியும் வாழலாம் என்ற தைரியம் வந்துவிடும். ஆனால் வேதம் என்ன கூறுகிறது? எபி.9:27ல் "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது".
*9.அரசாங்கம் நீதியான, நேர்மையான, உண்மையான நீதிபரிபாலனம் செய்யவில்லை. எனவே நமது அரசாங்கத்திற்கு கீழ்ப்படிய வேண்டாம் என்பது இவர்களது கொள்கை.
வேதம் கூறுவது என்ன?
மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். தேவனாலேயே எல்லா அதிகாரமும் உண்டாயிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்பது தேவனுக்கு எதிர்த்து நிற்பதாகும்(ரோமர் 13:1-7). ஒழுங்காக வரி கட்ட வேண்டும், தீர்வை கட்ட வேண்டும். பயப்பட வேண்டியவனுக்கு பயப்படுங்கள், கனம்பண்ண வேண்டியவனை கனம் பண்ணுங்கள்.
ராஜாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்(1பேது.2:13-17). ஒரு மெய் கிறிஸ்தவன் தேசத்தின் நல்ல பிரஜையாக இருக்க வேண்டும்.
...>>(தொகுப்பு நூல் : "உபதேசங்கள் பலவிதம்"(முதல் பாகம்); எழுதியவர் :P.S.ராஜமணி,தொடர்புமுகவரி :100_நாவலர் நகர்,மதுரை-625 010. )

**********************************************************************************************************************************
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.
(II யோவான் 1:10,11)
If there come any unto you, and bring not this doctrine, receive him not into your house, neither bid him God speed: For he that biddeth him God speed is partaker of his evil deeds.
(II John 1:10,11)
**********************************************************************************இயேசுகிறிஸ்துவை தொழுது கொண்டனர்:
¤அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.(மத்.8:2)
¤அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.(மத்.9:18)
¤அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.(மத்.14:33)
¤அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.(மத்.15:25)
¤அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.(மத்.20:20)
¤அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.(மத்.28:9,17)
மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசுகிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலும்
2.இயேசு சரீரத்தில் மரித்தார் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்|இயேசுகிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலை இவர்கள் மறுதலிக்கிறார்கள்.
வேத வசனங்களை ஆராய்வோம்:
¤இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.(லூக்.24:36-44)
சிறு பிள்ளையும் விளங்கக்கூடிய அளவில் இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளது, யெகோவா சாட்சிகளுக்கு ஏன் விளங்காமல் போனது. நமது ஊருக்கு வந்த தோமா, அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு அந்த காயத்திலே என் விரலைவிட்டு என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோன்றி தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு (இன்றுள்ள நிலைமைப்படி சொன்னால்.... தோமாவே, யெகோவா சாட்சியாக மாறிவிடாதே) என்றார். தோமா அவருக்கு பிரதியுத்தரமாக, என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்(யோ.20:24-31). வெளி.1:13-18ல் யோவான் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் கண்டதை விளக்கமாக எழுதியுள்ளார்.
இயேசுகிறிஸ்து நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்(அப்.1:3)
*3.யெகோவா சாட்சிகள் திரித்துவத்தை நம்புவதில்லை
யெகோவாவே தேவன், இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர், பரிசுத்த ஆவி ஆளத்துவமுடையவரல்ல, காண இயலாத ஒரு சக்தி அவ்வளவுதான் என்று போதிக்கின்றனர்; இந்த கொள்கையும் தவறானதாகும். திரித்துவத்தை விளக்குவது, கடினமான காரியம் என நமக்கு நன்கு தெரியும்; வேதாகம கல்லூரியில் 21 ஆண்டுகள் போதித்தேன். திரித்துவத்தைப் பற்றி தெளிவாக யாரும் விளக்கிவிட முடியாது என்பது உண்மை. நம்மால் விளக்க முடியாததால் வேத சத்தியம் தவறானதல்ல.
'தேவன்' என்பதற்கு எபிரெய வார்த்தை 'எலோகிம்'. இதை அப்படியே மொழி பெயர்த்தால் தேவர்கள் என்று வரும். ஆனால் வினைச்சொல் ஒருமையிலேயே வருகிறது. உதாரணமாக(ஆதி.1:1) ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று கூறலாம்; சிருஷ்டித்தார் என்பது ஒருமையில்தான் வருகிறது. எனவே தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளத்துவமுடையவர் என்ற கூற்று புலனாகிறது.
இயேசு... என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்(யோவான் 14:23). பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்; பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்(1 யோ.5:7) லூக்.3:21,22ல் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியானவர் புறா ரூபங்கொண்டு அவர்மேல் இறங்கினதையும் பிதா பரலோகத்திலிருந்து பேசுவதையும் காண்கிறோம்.மத்.28:19ல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசு கட்டளையிட்டார்.
2 கொரி.13:14ல், ஆசீர்வாத ஜெபத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், தேவனையும், பரிசுத்த ஆவியையும் காண்கிறோம்.ஆகிலும் மூன்று தேவர்களல்ல, தேவன் ஒருவரே, ஒரே தேவனில் மூன்று ஆளத்துவம் இருக்கிறது. இது எளிதில் விளங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனாலும் ஆதிகாலம் முதல் இந்த உபதேசம் அடிப்படையானதாக சபைத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
ஒரே நபரில் எப்படி மூன்று ஆளத்துவம் இருக்கமுடியும் என்பதற்கு என் பதில்... ஒரு நபருக்குள்ளே லேகியோன், அதாவது 6,000 ஆவிகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே, இதை விளங்கிக்கொள்ளவா முடிகிறது?
*4.கி.பி.1914ல் இயேசுகிறிஸ்து வந்துவிட்டார்; நாம் இப்போது ஆயிர வருட ஆட்சியில் இருக்கிறோம். யெகோவா தன் ராஜ்யத்தை உலகத்தில் நிறுவிவிட்டார் என்பது இவர்கள் கொள்கை.
இதைப்போல ஒரு ஜோக் யாரும் அடித்திருக்க முடியாது; என்ன அருமையான ஆயிர வருட ஆட்சி! சினிமா தியேட்டர்கள் பெருகுவதும், கொலையும் கொள்ளையும் பெருகுவதும், சினிமா நடிகர், நடிகைகளெல்லாம் ஆட்சி செய்வதும் என்ன பிரமாதமாக இருக்கிறது! வேதம் கூறும் ஆயிர வருட ஆட்சி இப்படியா இருக்கும்?
4.1.ஆயிர வருட ஆட்சியில் பிசாசு பாதாளத்தில் கட்டி வைக்கப்படுவான் என்று கூறப்பட்டுள்ளது.(வெளி.20:1,2).
இப்போது அதிக வேகத்தோடு அல்லவா வேலை செய்துகொண்டு இருக்கிறான்; கட்டப்படவில்லையே
4.2.இயேசு எருசலேமை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்வார்.(வெளி.20:4;எரே.23:5,6.)
பூமியெங்கும் அவர் ஒருவர்தான் ராஜாவாயிருப்பார்(சகரியா 14:9; சங்.72:6-11). இன்று யேசபேல், ஆகாப் போன்றவர்களல்லவா ஆட்சி செய்கிறார்கள்!
4.3.மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்து இயேசுவுடன் ஆட்சி செய்வார்கள்(வெளி.20:4,6; 2 தீமோ 2:11)
4.4.இஸ்ரவேலர் எல்லோரும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்(சகரியா 12:10-13; ஏசாயா 66:8).
4.5.இயற்கையில் மாற்றமுண்டாகும், வளப்பமுண்டாகும்(சகரியா 14:4-10; ஏசா.35:1-5)
4.6.மிருகங்கள் தீமை செய்யாது, ஒற்றுமையாக இருக்கும்.
ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்(ஏசா.11:6) (இப்போது ஒரு குடும்பத்திலேயே எல்லோரும் சேர்ந்து படுக்க பயப்படுகிறார்களே)
"பசுவும் கரடியம் கூடிமேயும்"ஏசா.11:7. (ஒரு சபை விசுவாசியும், அடுத்த சபை விசுவாசியும் ஐக்கிமாயிருப்பதே இப்போது பெரிய சாதனையாக இருக்கிறதே). "பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்"ஏசா.11:8(இந்த வேலையை யாரும் இப்போது செய்துவிட வேண்டாம்). சிங்கம் மாட்டைப்போல வைக்கோல் தின்னும்"ஏசா.11.7.(இப்போதுள்ள பஞ்சத்தில் இது வேண்டுமானால் நடக்கலாம்) ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது மிருகங்களுடைய சுபாவமே மாற்றப்படும். தீமை செய்கிறவர்களே இருக்கமாட்டார்கள்(ஏசாயா 11:9).
ஆயுசு நாட்கள் நீடித்திருக்கும். 100வயதுள்ளவனும் வாலிபன் என்று எண்ணப்படுவான்(ஏசா.65:20). சாத்தான் பாதாளத்தில் கட்டப்பட்டிருப்பதால் தீமை இருக்காது. இயேசுகிறிஸ்து ஆட்சி செய்வதால் உலகமெங்கும் ஆசீர்வாதமும், செழிப்பும் இருக்கும். இதில் ஒன்றும் இப்போது நடக்கவில்லை. எனவே இயேசு இன்னும் வரவில்லை, ஆயிரம் வருட ஆட்சி ஆரம்பிக்கவில்லையென்று குருடனுக்குக் கூட தெளிவாகத் தெரியும்.
*5.இயேசுகிறிஸ்துவின் தியாகபலி மட்டும் நம்மை இரட்சிக்கப் போதுமானதல்ல
ஆதாமின் பாவத்திற்கு பரிகாரம் இயேசுகிறிஸ்துவின் மரணத்தால் உண்டாகியிருக்கிறது. மனித இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவின் பலி போதுமானதல்ல; ஒருவன் யெகோவாவிற்கு உண்மையாயிருந்து, வசன போதனை, பிரசங்கங்களைக் கேட்டால்தான் இரட்சிக்கப்படுவான் என்று நம்புகின்றனர்.
வேதம் இதற்கு பதில் கூறுவது:
¤கிருபையினாலே இரட்சிக்கப்படுகிறோம்(எபே.2:8,9)
¤கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் புது சிருஷ்டியாகிறான்(2 கொரி 5:17)
¤இயேசுவை விசுவாசித்தால் இரட்சிப்பு கிடைக்கிறது(அப்.16:31)
¤குமாரனை உடையவன் நித்திய ஜீவனை உடையவன்(1யோ.5:12)
¤இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்(1யோ.1:7).
*6.ஆத்துமா நித்தியமானதல்ல, ஆக்கினைத் தீர்ப்பும் நித்தியமல்ல.
வேதம் கூறுவது என்ன?
*மத்.25:41,46:
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
நித்திய அக்கினி, நித்திய ஆக்கினை பாவிகளின் பங்கு.
*வெளி.20:15:
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
*மத்.10:28:....ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
இவ்வசனத்தை இவர்கள் ஆதாரமாகக்கொண்டு பாவிகளின் ஆத்துமா அழிக்கப்படும்; நித்திய ஆக்கினை அடைய மாட்டார்கள் என நம்புகின்றனர்; அப்படியானால் வெளி.20:12ல் மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன் என்று யோவான் சொல்வது எப்படி? அழிக்கப்பட்டுவிட்டால் எப்படி இங்கே நிற்பார்கள்?
*7.வெளி.14:1-5ல் கூறப்பட்டுள்ள 1,44,000 நாங்கள்தான் என்கிறார்கள்
சண்டை இங்கே தான் ஆரம்பமாகிறது. ஏழாம்நாள் ஒய்வுக்காரரும் நாங்கள் தான் இந்தக் கூட்டம் என்கிறார்கள். நமது அருமை நண்பர்கள் இலங்கை பெந்தெகொஸ்தேகாரரும் நாங்கள்தான் இவர்கள் என்கிறார்கள்; இவர்களில் யார் வெற்றியடைந்து எந்தக் கூட்டத்தாரானாலும் சரி, அல்லது ஒரு சமரசத்திற்கு வந்து மூவரும் சமமாக பங்கிட்டுக் கொண்டாலும் நமது வாழ்த்துக்கள் அவர்களுக்கு உண்டு.
யூதர்களில் கோத்திரத்தாருக்கு 12000 வீதம் 12 கோத்திரத்தாரும் உபத்திரவ காலத்தில்(வெளி.7) முத்திரை போடப்பட்டு(வெளி.14) பரலோகத்தில் காணப்படுகிறார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.
*8.மற்ற எல்லாருக்கும் மறுபடியும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படும்; மற்ற எல்லாருக்கும் ஒரு பரீட்சை(Test) கொடுக்கப்படும்; அதில் யெகோவாவிற்கு கீழ்படிகிறவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்பது இவர்களின் கொள்கை.
நம் சபையார்களுக்கு இது ஆறுதலாகத் தெரியலாம்; அப்லபடியானால் இங்கே எப்படியும் வாழலாம் என்ற தைரியம் வந்துவிடும். ஆனால் வேதம் என்ன கூறுகிறது? எபி.9:27ல் "ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது".
*9.அரசாங்கம் நீதியான, நேர்மையான, உண்மையான நீதிபரிபாலனம் செய்யவில்லை. எனவே நமது அரசாங்கத்திற்கு கீழ்ப்படிய வேண்டாம் என்பது இவர்களது கொள்கை.
வேதம் கூறுவது என்ன?
மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். தேவனாலேயே எல்லா அதிகாரமும் உண்டாயிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்பது தேவனுக்கு எதிர்த்து நிற்பதாகும்(ரோமர் 13:1-7). ஒழுங்காக வரி கட்ட வேண்டும், தீர்வை கட்ட வேண்டும். பயப்பட வேண்டியவனுக்கு பயப்படுங்கள், கனம்பண்ண வேண்டியவனை கனம் பண்ணுங்கள்.
ராஜாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்(1பேது.2:13-17). ஒரு மெய் கிறிஸ்தவன் தேசத்தின் நல்ல பிரஜையாக இருக்க வேண்டும்.
...>>(தொகுப்பு நூல் : "உபதேசங்கள் பலவிதம்"(முதல் பாகம்); எழுதியவர் :P.S.ராஜமணி,தொடர்புமுகவரி :100_நாவலர் நகர்,மதுரை-625 010. )
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.